காரைக்குடி பகுதியில் காவிரி கூட்டுகுடிநீர் திட்டப்பணிகள்: கலெக்டர் ஆஷாஅஜீத் ஆய்வு

 

காரைக்குடி, ஜூலை 28: காரைக்குடி பகுதியில் நடந்து வரும் காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை கலெக்டர் ஆஷாஅஜீத் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் சீரான குடிநீர் வழங்க அரசு இத்திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதற்கு என ரூ.1752.73 கோடி நிதி ஒதுக்கி பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இத்திட்டத்தின்படி மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 2452 ஊரக குடியிருப்புகள் மற்றும் 3 நகராட்சி பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. குளித்தலை அருகில் காவிரி ஆற்றை நீராதாரமாக கொண்டு இந்த மாபெரும் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் நடக்கிறது.

2021 மக்கள் தொகையின்படி 11.39 லட்சம் மக்களுக்கு 49.83 மில்லியன் லிட்டர் அளவிலும். இத்திட்டத்தின்படி 2036 மக்கள் தொகையின்படி 13.56 லட்சம் மக்களுக்கு 69.50 மில்லியன் லிட்டர் அளவு மற்றும் 2051 மக்கள் தொகை 16.11 லட்சம் மக்களுக்கு 86.42 மில்லியன் லிட்டர் அளவில் குடிநீர் தினமும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது வரை 5 கிணறுகளில் 3 கிணறுகள் பணி நடந்து வருகிறது. குழாய்கள் 4600.90 கி.மீக்கு 3885.41 கி.மீ நீளம் பைப்லைன் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது.

தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் 385க்கு 369 முடிக்கப்பட்டுள்ளது. மேல்நிலை தொட்டிகள் 758க்கு 537ம், விசைப்பம்பு அறைகள் 391க்கு 304 முடிக்கப்பட்டுள்ளது. கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் தொடப்பாக காரைக்குடி, சிங்கம்புணரி பகுதியில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பணிகளை தரமான முறையில் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’