காரைக்கால் வாரச்சந்தையில் காய்கறிகளில் சாயம் கலந்து விற்பதை தடுக்க வேண்டும்

காரைக்கால், செப்.29: காரைக்காலில் வாரத் சந்தையில் காய்கறிகள் அதன் நிறம் தெரிய நிறம் ஓட்டி கலந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் இயக்கம் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளது.

பாண்டிச்சேரி இந்திய நுகர்வோர் இயக்கம் மற்றும் நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் வழக்கறிஞர் திருமுருகன் ஆலோசனைப்படி, மாநில செயலாளர் சிவகுமார் தலைமையில் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:

காரைக்காலில் நடைபெறும் வாரசந்தையில் காய்கறிகளில் அதன் நிறம் தெரிய நிறம் ஓட்டி கலக்கப்படுகிறது. இதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருசில தனியார் மருத்துவமனையில் ஆன்லைன் பேமென்ட் வாங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் மறைமுக கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராஜதுரை மற்றும் பொறுப்பாளர் உடனிருந்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை