காரைக்கால் திரு.பட்டினத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை

காரைக்கால்,ஆக.4: கடலூர் மாவட்டம் நெய்வேலி விருதாச்சலம் ரோமாபுரி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவர் பஞ்சாயத்து போர்டு டேங்க் ஆப்பரேட்டராக வேலை செய்து வருகிறார். இவரது மூத்த மகள் ஷர்மி நிஷாந்தினியை (19). காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் முதலிமேட்டை சேர்ந்த பிரின்ஸ் கிளிண்டன்(21) என்பவருடன், கடந்த 13.11.22 அன்று திமணம் செய்து கொடுத்தார். தொடர்ந்து, கணவர் வீட்டிலேயே ஷர்மி நிஷாந்தினி வாழ்ந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஷர்மி நிஷாந்தினி தந்தை வீட்டுக்கு சென்றபோது, நெற்றியில் தையல் போட்டு இருந்தார். தந்தை என்னவென்று விசாரித்தபோது, கணவர் குடித்துவிட்டு அடித்துவிட்டதாக கூறினார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன், ஷர்மி நிஷாந்தினி தந்தைக்கு போன் செய்து, கணவர் தினமும் குடித்துவிட்டு அடித்து கொடுமைச் செய்வதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், பிரின்ஸ் கிளிண்டன் தாய் விக்டோரியா ஆரோக்கியராஜிற்கு போன் செய்து, ஷர்மி நிஷாந்தினி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைச் செய்துகொண்டதாக கூறியதை அடுத்து, ஆரோகியராஜ், உறவினர்களுடன் திரு.பட்டினம் சென்று விசாரித்தபோது, 1ம் தேதி இரவு 11 மணிக்கு கணவர், மனைவி இருக்கும் இடையே சண்டை நடைபெற்றதாகவும், தொடர்ந்து, கணவர் மனைவியை அடித்துவிட்டதாகவும், அந்த கோபத்தில், ஷர்மி நிஷாந்தினி தனி அறையில் படுத்து தூங்கிவிட்டதாகவும், காலையில் எழுந்து பார்த்தபோது, ஷர்மிநிஷாந்தினி தூக்கில் தொடங்கியதாகவும் தெரியவந்தது. இது குறித்து, ஆரோக்கியராஜ், திரு.பட்டினம் போலீசில், கணவர் தாக்கி கொடுமை செய்ததாலோ அல்லது வேறு காரணத்திபனாலோ ஷர்மிநிஷாந்தினி தூக்கில் தொங்கியிருக்கலாம். எனவே, ஷர்மி நிஷாந்தினி இறந்ததற்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்கவேண்டும் என புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் முடிந்து ஒரு வருடத்திற்கு குறைவாக உள்ளதால், தாசில்தார் விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்