காரைக்கால் இறால் அடை

செய்வது எப்படி?முதலில் இறாலை சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து லேசாக எண்ணெய் விட்டு பிரட்டவும். வெங்காயம் கறிவேப்பிலை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். இப்போது சீரகம், காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகத்தை வறுத்து பொடி போல செய்யவும். அடுப்பில் வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இறால் சேர்த்து தீயை மிதமாக வைத்து நன்கு வதக்கவும். இத்துடன் சீரக கலவையை சேர்த்து நன்றாக கிளறவும்.அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் இட்டு, அதில் வெங்காய இறால் கலவை, ரவை, தேங்காய்ப்பால் ஊற்றி நன்கு பிசையவும். பின்னர் முட்டையை அடித்து ஊற்றி, நன்கு கலக்கி 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, மிதமான தீயில் வைத்து அடை போல இறால் கலவையை ஊற்றவும். சுற்றிலும் 2 ஸ்பூன் நெய் விடலாம். பொன்னிறமாக வெந்ததும் திருப்பி போடவும். அவ்வளவுதான்… இறால் அடை ரெடி. இதையே கூடுதல் கெட்டி பக்குவத்தில் செய்து வடையாகவும் செய்யலாம்.

Related posts

கரண்டி ஆம்லேட்

கறி ஊறுகாய்

ஹெர்ப் சிக்கன் ஃப்ரை