காரைக்கால் அருகே மினி வேன்களுக்கு ஒரே பதிவெண் நம்பர் பிளேட் பொருத்தி மோசடி-வாகனங்கள் பறிமுதல், 3 பேர் கைது

காரைக்கால் : ஒரு மோட்டார் வாகனத்தின் பதிவெண்ணை போலியாக மேலும் இரு வாகனங்களுக்கு பொருத்தி மோசடியில் ஈடுபட்டதாக மூவரை கைது செய்த போலீசார், மூன்று வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.காரைக்காலை சேர்ந்த கோட்டுச்சேரி காவல் நிலைய சிறப்புநிலை உதவி ஆய்வாளர் பாபு மற்றும் போலீசார், வரிச்சிக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் டயர் ரீட்ரெடிங் நிறுவனம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த நிறுவனத்திற்கு அருகில் உள்ள காலிமனையில் TN-68 P5965 என்ற பதிவெண்ணைக் கொண்ட நீலநிற இலகுரக சரக்கு வாகனம் ஒன்றும், அதனருகில் அதே பதிவெண் கொண்ட மேலும் இரண்டு வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்ததை கண்டனர். இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்று, அங்கு ரெப்ரசன்டேட்டிவ் ஆக பணியாற்றி வந்த மரியரெக்ஸ் அலெக்சாண்டர், ஓட்டுநர்களாக பணியாற்றி வந்த அருள் என்கிற அருளானந்தம் மற்றும் ரவி ஆகியோரிடம் விசாரித்தபோது அவர்கள் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர்.TN-68 P5965, TN-68 P5967 மற்றும் TN-68 P5937 ஆகிய 3 டாடா பியாஜியோ வாகனங்களில், TN-68 P5967 மற்றும் TN-68 P5937 ஆகிய இரு வாகனங்களுக்கு பர்மிட், இன்ஸ்யூரன்ஸ் மற்றும் பிட்னஸ் சர்டிபிகேட் எடுக்காததால், பர்மிட், இன்ஸ்யூரன்ஸ் மற்றும் பிட்னஸ் சர்டிபிகேட் உள்ள TN-68 P5965 என்ற பதிவெண் உள்ள வாகனத்தின் நம்பர் பிளேட்டுகளை மற்ற இரு வாகனங்களுக்கும் பொருத்தி இயக்கி வந்ததும், சேசிஸ் எண்கள் வெவ்வேறானவை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.இதுதொடர்பாக சிறப்புநிலை உதவி ஆய்வாளர் பாபு கொடுத்த புகாரின்பேரில், மேற்கண்ட மூன்று வாகனங்களையும் பறிமுதல் செய்த எஸ்ஐ செந்தில்குமார் மற்றும் போலீசார், போக்குவரத்து துறையை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்து, இது தொடர்பாக கோட்டுச்சேரி பகுதியை சேர்ந்த கஸ்பர்ராஜ் மகன் மரியரெக்ஸ் அலெக்சாண்டர்(40) மற்றும் குஞ்சிதபாதம் மகன் அருள் என்கிற அருளானந்தம்(45), வரிச்சிக்குடியை சேர்ந்த பிச்சைமுத்து மகன் ரவி(52) ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறனர்….

Related posts

மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்!

கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம்

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது