காரைக்காலில் வேலைவாய்ப்பு பயிற்சி கருத்தரங்கு

காரைக்கால்,ஆக.9: காரைக்கால் டாக்டர் கலைஞர் கருணாநிதி ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி கருத்தரங்கு நடந்தது. காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி மற்றும் ஆராய்ச்சி மையம் காரைக்கால் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி பிரிவின் சார்பாக மூன்று நாட்கள் லிங்க்டின் கிக் ஸ்டார்டர் பயிற்சியின் துவக்க விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சன், கல்லூரியின் முதல்வர் ஆசாத் ராசா, திருபட்டினம் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி மையத்தின் முதல்வர் சுகுணா, சென்னை பேஸ்ஆப் நிறுவனத்தின் மேலாளர் பிரசாத் மற்றும் பயிற்றுனர் கவுரிசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளின் முக்கியத்துவத்தை பற்றியும், மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்காக கல்லூரி மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் திட்டங்களை பற்றியும் பேசினார். மேலும் நிகழ்ச்சியில் கல்லூரியின் முதுகலை வணிகவியல் துறை தலைவரும் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு பிரிவு தலைவர் முனைவர் ஜாகிர் அஹமது வரவேற்றார். இளங்கலை வணிகவரித்துறை தலைவர் மற்றும் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளர் மதன் மோகன் காந்தி நன்றி கூறினார். விழாவை கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு பிரிவு உறுப்பினர்களும் கல்லூரியின் வணிகவரித்துறை மாணவர்களும் ஒருங்கிணைத்தனர் மூன்று நாட்கள் பயிற்சி நடைபெற்று வருகிறது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்