காரைக்காலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

காரைக்கால்,மார்ச் 1: காரைக்காலில் வாக்காளர் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாகனம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுவை மாநில தேர்தல் துறையின் சார்பில் காரைக்கால் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு வாகனம் மூலமாக மாவட்ட கலெக்டர் மணிகண்டன் அறிவுறுத்தலின் பேரில் காரைக்காலில் 11 நாட்கள் பல்வேறு இடங்களான கிராமப்புறங்கள், நகர்ப்புறங்கள், சந்தைதிடல், மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் தேர்தல் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தினர். குறிப்பாக தங்கள் வாக்கை தவறாமல் வாக்களிப்பது,நேர்மையாக வாக்களிப்பது குறித்து, காரைக்கால் மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவு நடைபெருவதற்கான ஆயத்த நிலை குறித்து, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றன.

இளம் வாக்காளர்களுக்கு வாக்களிப்பதின் அவசியம் குறித்து அந்தந்த பள்ளி கல்லூரிகளுக்கு சென்று விளக்கினார். அதன் ஒரு பகுதியாக விநாயக மிஷன் மருத்துவக் கல்லூரியில் அங்கு படிக்கும் இளம் வாக்காளர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் இடையே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அருகில் உள்ள மீனவர் கிராமங்களிலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த 11 நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் மற்றும் வாக்காளர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பது அவசியம் குறித்து பயன்பெற்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை