காரைக்காலில் சாலை அகலப்படுத்தும் பணி தாமதம்

 

காரைக்கால்,ஜன.13: காரைக்காலில் சாலை அகலப்படுத்தும் பணி தாமதமாக நடக்கிறது. எனவே விரைவில் முடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டம் பூவம், கோட்டுச்சேரியில் பகுதிகளில் பெரும்பாலான இடங்களும், காரைக்கால் நகர பகுதியில் சில இடங்களும் விடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களுக்கு இடையே சென்று வருகின்றனர்.

காரைக்கால் மாவட்டம் பூவம் முதல் வாஞ்சூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை சுமார் 20 கிமீ இருபுறமும் 1.5மீட்டர் அகலப்படுத்தி, மேம்படுத்தும் பணிக்காக ரூ.10 கோடி மதிப்பில் 2017 ஜூன்மாதம் தொடங்கப்பட்டது. சுமார் 7ஆண்டுகள் ஆகிய நிலையில் அப்பணி நிறைவு செய்யப்படாதது ஏன்? என அப்பகுதி மக்களின் கேள்வியாக உள்ளது.சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பதில் இது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் குழு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று காரைக்கால் சமூக ஆர்வலர் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை