காரியாபட்டி பேரூராட்சியில் இடியும் நிலையில் காலனி வீடுகள்: பராமரிக்க கோரிக்கை

 

காரியாபட்டி, மே 29: காரியாபட்டி பேரூராட்சிக்குட்பட்ட செவல்பட்டி காமராஜர், ஜெகஜீவன் ராம், கரிசல்குளம் பகுதிகளில் ஆதிதிராவிட மக்களுக்கு கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. தற்போது காலனி குடியிருப்பு பகுதியில் பல வீடுகளின் மேற்கூரைகள் பழுது ஏற்பட்டு காணப்படுகின்றன. மேலும் சில வீடுகள் இடியும் நிலையில் உள்ளது. மழை காலங்களில் மேற்கூரைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் வீட்டு சுவர்கள் மேலும் வெடிப்பு ஏற்பட்டு பழுதடைந்து காணப்படுகிறது.

இதுகுறித்து காலனி வீட்டில் குடியிருக்கும் குருவம்மாள் கூறியதாவது: பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட காலனி வீட்டில் குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றோம். வீடுகள் மிகவும் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் எப்போது இடிந்து விழும் என்ற பயத்தில் வாழ்ந்து வருகிறோம். அன்றாடம் கூலி வேலை செய்து பிழைத்து வரும் எங்களுக்கு பழுதடைந்த காலனி வீடுகளை பராமரிக்க அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு