காரியாபட்டியில் குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

காரியாபட்டி, ஆக.23: காரியாபட்டி வட்டார குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அரசு அலுவலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், சமூக அமைப்பு பிரதிநிதிகள், சத்துணவு, சமூகநலம், வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், காரியாபட்டி வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அருகில் இயங்கும் பெட்டிக்கடைகளை அவ்வப்போது காவல்துறையினர் சோதனை செய்ய வேண்டும், ஒன்றியத்தில் கிராமங்கள் தோறும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார முகாம்கள் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காரியாபட்டி ஒன்றியத்தில் இடைநின்ற பள்ளி மாணவர்களை மீண்டும் பள்ளியில் கல்வி கற்க செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி