காரிமங்கலம் அருகே மகாமுனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா

காரிமங்கலம், ஜூன் 29: காரிமங்கலம் ஒன்றியம், காளப்பனஅள்ளி ஊராட்சி குப்பாங்கரை காட்டுக்கொட்டாய் கிராமத்தில் உள்ள மகா முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா, கடந்த 21ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம், கணபதி பூஜை, முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று 2ம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதி மற்றும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து முனீஸ்வரர் சுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை (29ம்தேதி) முதல் மண்டல பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்