காரமடை நகராட்சி கூட்டத்தில் 41 தீர்மானம் நிறைவேற்றம்

காரமடை, ஆக.9:காரமடை நகராட்சி கூட்டத்தில் 41 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.காரமடை நகராட்சியின் சாதாரண மன்ற கூட்டம் நகர் மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் கமிஷனர் மனோகரன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மொத்தமாக 41 தீர்மானங்கள் மன்றத்தின் பார்வைக்காக முன்வைக்கப்பட்டன. தொடர்ந்து கவுன்சிலர்கள் ராமுகுட்டி (திமுக), குரு பிரசாத் (திமுக), விக்னேஷ் (பாஜக), வனிதா (அதிமுக) ஆகியோர் சீரான குடிநீர் வினியோகம், காரமடை ரங்கநாதர் கோயில் ஆக்கிரமிப்பு அகற்றம் உள்ளிட்டவை குறித்து பேசினர்.

தொடர்ந்து, நகர்மன்ற தலைவரின் கணவர் வெங்கடேஷ் வளர்ச்சி திட்ட பணிகளில் தலையிடுவதாக குற்றம்சாட்டி பெண் கவுன்சிலர்கள் நகர் மன்ற தலைவர் உஷா வெங்கடேஷை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நகர்மன்ற கூட்டரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடும் விவாதங்களுக்கு இடையே 41 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும், கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாகவும் நகர மன்ற கூட்டத்தில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி