காரமடை நகராட்சியில் ரூ.10.5 கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகள்

 

காரமடை, ஆக.28: காரமடை நகராட்சிக்குட்பட்ட காமராஜர் நகர், காந்தி நகர், அம்பேத்கர் நகர், வாணியர் வீதி, அண்ணா வீதி, அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கலைஞரின் நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய தார் சாலைகள் அமைத்தல், தார் சாலைகளை புதுப்பித்தல், புதிதாக போர்வெல் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் ரூ.10.5 கோடி மதிப்பீட்டில் நேற்று துவக்கப்பட்டன. திமுக துணைப்பொது செயலாளரும், நீலகிரி எம்பி.யுமான ஆ.ராசா கலந்து வளர்ச்சித்திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்எல்ஏ பா.அருண்குமார், திமுக தலைமைச்செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி. கல்யாணசுந்தரம், மாவட்ட அவைத்தலைவர் புருஷோத்தமன், முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மனோகரன், நகர செயலாளர் வெங்கடேஷ்,நகர் மன்றத்தலைவர் உஷா வெங்கடேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Related posts

வத்திராயிருப்பு அருகே ரூ.11 லட்சத்தில் வன வேட்டை கும்பலை கண்காணிக்க ‘வாட்ச் டவர்’

தமிழ்நாடு நாள் பேச்சு, கட்டுரை போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

வடமாநில வாலிபர் சடலம் மீட்பு