காய்கறி வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து ₹5 லட்சம் நகை, பணம் திருட்டு

விழுப்புரம், ஆக. 4: விழுப்புரம் அருகே காய்கறி
வியாபாரி வீட்டில் நகை, பணம் திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே சாலாமேடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் மனைவி சந்திரலேகா (45). காய்கறி வியாபாரம் செய்து வரும் இவர் தனியாக வசித்து வருகிறார். இதனிடையே நேற்று அதிகாலை மீன் வாங்குவதற்காக அனிச்சம் பாளையத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு சென்று 6 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 8 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. உடனே தாலுகா காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் சோதனை நடத்தப்பட்டது. சந்திரலேகா அதிகாலையில் மீன் வாங்குவதற்காக சென்றதை நோட்டமிட்டுதான் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் சந்தேக நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருடு போன நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

Related posts

நாகப்பட்டினம் மெய்கண்ட மூர்த்தி சுவாமி கோயிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நாகப்பட்டினம் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்

பவளவிழாவையொட்டி தலைஞாயிறு பேரூர் பகுதியில் திமுக கொடியேற்றம்