காய்கறி வியாபாரி கொலையில் தலைமறைவான இருந்த பிரபல ரவுடி கூட்டாளி கைது

சென்னை: ராஜா அண்ணாமலைபுரம் படவேட்டம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ் (55). இவர், தனது மருமகன் மோகனுடன் இணைந்து காய்கறி கடை நடத்தி வருகிறார். மோகன், சகோதரர் முத்துமாடசாமி என்பவருக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இதற்கிடையே கடந்த வாரம் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு குடும்பத்துடன் சென்று இருந்தார். அப்போது மோகன் மற்றும் அவரது சகோதரர் சொத்து தொடர்பான பிரச்னை உறவினர்கள் முன்னிலையில் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது தனது மருமகன் மோகனுக்கு ஆதரவாக பொன்ராஜ் செயல்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரம், முத்துமாடசாமியின் மனைவியின் சகோதரன் அற்புதராஜ் (32) சொத்து பிரச்னையில் பொன்ராஜ் தலையிடகூடாது என்று தகராறு செய்துள்ளார்.பின்னர் 12ம் தேதி பொன்ராஜ் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அற்புதராஜ் தனது கூட்டாளிகளான தேனாம்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி வாண்டு மணி, அவரது கூட்டாளி சுப்பிரமணியுடன் சென்று, பொன்ராஜை கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து அபுராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 14ம் தேதி அற்புதராஜை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்கில் தொடர்படைய பிரபல ரவுடி வாண்டு மணி, அவரது கூட்டாளி சுப்பிரமணியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் செல்போன் சிக்னல் உதவியுடன் நேற்று அதிகாலை 2 குற்றவாளிளையும் கைது செய்தனர். …

Related posts

63 வயது மனைவியை குத்தி கொன்ற 72 வயது கணவர்

12 டூவீலர்களை திருடிய ‘கோடீஸ்வரர்’ கைது: பல கோடி சொத்துக்கு அதிபதி

தாயுடன் கள்ளத்தொடர்பு; விவசாயி கொன்று வீச்சு: வாலிபர் கைது