காய்கறி, பழங்களில் மதிப்பு கூட்டுதல் பயிற்சி

 

தர்மபுரி, செப்.2: தர்மபுரி மாவட்டத்தில், விவசாயிகள் அதிக அளவில் காய்கறி மற்றும் பழங்கள் சாகுபடி செய்து வருகின்றனர். அவற்றை சந்தைப்படுத்துதல் மூலம் வருமானம் மிக குறைவாக உள்ளது. இதனால், காய்கறி மற்றும் பழங்களில் மதிப்பு கூட்டுதலின் மூலம், வருமானத்தை இரட்டிப்பாக்குவது குறித்து பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில், ஒரு நாள் பயிற்சி முகாம் இன்று (2ம்தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது.

இதில், “காய்கறி மற்றும் பழங்களில் மதிப்பு கூட்டுதல் மற்றும் தொழில் நுட்பங்கள்” என்ற தலைப்பில் பயிற்சி நடக்கிறது. ஆர்வமுள்ள விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம், என திட்ட ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா தெரிவித்துள்ளார்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்