Friday, July 5, 2024
Home » காய்கறிகளின் அரசன் முருங்கை

காய்கறிகளின் அரசன் முருங்கை

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர் * ஏழைகளின் மரப்பயிர் முருங்கை மரம். முருங்கை மரத்திற்கு ‘பிரம்ம விருட்சம்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. எல்லா இடங்களிலும் வளரும் மரம் இது.* பஞ்ச பூத சக்திகள் முருங்கைக்காயில் மிகுந்து உள்ளதால் பல பிணிகளை விரட்டும் தன்மை கொண்டது. முருங்கைக்காயை சூப்பாக செய்து சாப்பிட்டால் அருமையான மருத்துவ குணங்களை அழியாமல் பெறலாம்.* மனித நாடி, நரம்புகளை உரமேற்றி, மெருகேற்றுவது முருங்கை. கபத்தை வெளியேற்றும். உடலுக்கு அருமையான பலத்தை தரும். நலிவடைந்தவர்களுக்கும் பிணிகளால் நரம்பு தளர்ந்தவர்களுக்கும் முருங்கைக்காய் சூப் ஒரு வரப்பிரசாதம்.* இரத்த விருத்திக்கு தினம் முருங்கைக்காய் சாப்பிட்டு வரலாம். சிறுவர், சிறுமியர் இரவில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோயை இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் தவிர்க்கலாம். எலும்புருக்கி நோய் சரியாகும். பெண்களின் மாதவிடாய் நோய்கள், உதிரப்போக்கு முதலியன நீங்கும்.* காக்காய் வலிப்பு நோயால் அவதியுறும் அன்பர்கள் அடிக்கடி அரை வேக்காடு பதத்தில் முருங்கைக்காய் சூப்பை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.* நரம்பு பிரச்னை நோய் உள்ளவர்கள் முருங்கைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் பொட்டாசியம் சத்து மிகுந்து உள்ளதால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் பெறலாம்.* நீரிழிவு நோயாளிகள் நலத்திற்கு உத்திரவாதம் தரும் ஒப்பற்ற காய். மாலைக்கண் வியாதிகளை நீக்க வல்லது. * கண்ணாடி அணிந்தவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான நோய்கள் அதிகமாவதைத் தடுக்கலாம். – அ.திவ்யா, காஞ்சிபுரம்.குளிர்கால டிப்ஸ்* பனிக்காலத்தில் சருமம் உலர்ந்து வெடிப்பு ஏற்படும். இதை குணப்படுத்த வைட்டமின் ஈ காப்ஸ்யூல் எண்ணெயை இரவு முகத்தில் பூசி சிறிது நேரம் ஊறிய பின், இளஞ்சூடான நீரால் முகத்தை கழுவி வரவும்.* பனிக்காலத்தில் உதடு வெடித்து எரிச்சல், வலி ஏற்படலாம். இதற்கு தினசரி வாஸலைன் கிரீம் அல்லது ஒயிட் பெட்ரோலிய ஜெல்லி பூசி வருவது நல்லது.* குளிர்காலத்தில் முகத்திற்குப் பூச எலுமிச்சை சாறை பயன்படுத்த வேண்டாம். பாலாடையை எடுத்து முகத்தில் பூசி ஊறியபின் கழுவி வரலாம்.* வீட்டிற்குள் ஈரம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். தரையை துடைத்த பிறகு பழைய பெட்ஷீட், சணல் சாக்கு போன்றவற்றை தரை காயும் வரை ஆங்காங்கே விரித்து வைக்கவும். * பனிக் காலத்தில் துணிகள் எளிதில் உலர்வதில்லை. எனவே கனமான, முரட்டுத் துணிகளை அதிகம் பயன்படுத்த வேண்டாம்.* ஸ்வெட்டர், சாக்ஸ், மப்ளர் போன்றவற்றை எடுத்து சுத்தப்படுத்தி ரெடியாக வைத்துக்கொள்ளுங்கள்.* தீப்பெட்டி, விளக்கு, மெழுகுவர்த்தி, எமர்ஜென்ஸி லாம்ப், டார்ச் போன்றவை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். தக்க சமயத்தில் உதவியாக இருக்கும்.* வெளியே போய் வந்ததும் சுத்தமான தண்ணீரால் கால்களை நன்கு கழுவி, கிரீம் பூசவும். இதனால் சேற்றுப்புண் ஏற்படாமல் தவிர்க்கலாம்.* பனிக்காலத்தில் மிளகு, ரசம், பூண்டு, வெங்காயம் இவற்றை அதிகமாகப் பயன்படுத்தினால், நோய்க்கிருமிகள் பரவாது.* எப்போதும் தண்ணீரை கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்கலாம். * இருமல் சிரப், காய்ச்சல், தலைவலி மாத்திரைகள் மற்றும் விக்கல் போன்றவற்றை தயாராக வைத்திருப்பது குளிர்காலத்தில் ஏற்படும் திடீர் சளி, இருமல், தும்மல் போன்றவற்றிற்கு உதவியாக இருக்கும்.தொகுப்பு: சா.அனந்தகுமார், கன்னியாகுமரி.

You may also like

Leave a Comment

one × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi