காயும் பயிர்களை காப்பாற்ற 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும்: விருவீடு பகுதி விவசாயிகள் கோரிக்கை

 

வத்தலக்குண்டு, அக். 4: வத்தலக்குண்டு அருகே விருவீடு பகுதியில் காயும் பயிர்களை காப்பாற்ற வைகை அணையில் இருந்து 58ம் கால்வாயில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்தலக்குண்டு ஒன்றியம் விருவீடு ஊராட்சி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் முருங்கை, அவரை போன்ற பல்வேறு விவசாயங்கள் நடந்து வருகிறது. விருவீடு பகுதியில்ஆறுகள் எதுவும் இல்லை. மழை பெய்தால் தான் கண்மாய்களுக்கு தண்ணீர் வரும். கண்மாய்கள் நிறைந்த பிறகு கிணறுகள் ஊற்றெடுத்து விவசாயம் தொடர்ந்து நடைபெறும். கடந்த செப்டம்பர் மாதம் மற்ற இடங்களில் ஓரளவு மழை பெய்தாலும் விருவீடு பகுதியில் மழை இல்லை.

இதனால் இப்பகுதியிலுள்ள கண்மாய்கள் வறண்ட நிலையில் உள்ளன. கண்மாயில் மீன்கள் நீந்த வேண்டிய நேரத்தில் ஆடுகள் மேய்ச்சலுக்கு திரிகின்றன. கடந்த ஆண்டு இதேபோல் தண்ணீர பற்றாக்குறை ஏற்பட்ட போது வைகை அணையிலிருந்து வரும் 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு வாய்க்கால்கள் மூலம் கண்மாய் நிறைக்கப்பட்டது. அதேபோல் இப்போதும் காயும் பயிர்களை காப்பாற்ற வைகை அணையிலிருந்து 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை