காமராஜர் பல்கலைக்கழக விடுதியில் மின்வயரில் தீப்பிடித்து டிரான்ஸ்பார்மர் ‘டமார்’ கரும்புகையால் மாணவிகள் அச்சம்

 

திருப்பரங்குன்றம், நவ. 5: மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் துணைவேந்தர் இல்லத்திற்கு அருகே மாணவியர் விடுதி அமைந்துள்ளது. இங்கு சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு சுமார் 10.30 மணியளவில் இங்குள்ள மரக்கிளை மின்கம்பத்தில் உள்ள மின்வயரில் உரசியதால், மின்வயர் திடீரென தீப்பற்றி எரிந்தது. மின்வயரில் பற்றிய தீ மளமளவென பரவி அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரிலும் பற்றி வெடித்துள்ளது.

இதனால் பெண்கள் விடுதி முழுவதும் கரும்புகையாக மாறியது. கரும்புகை சூழ்ந்ததும் விடுதியில் இருந்த மாணவிகள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியிலும், மாணவிகளை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர். இதில் 10க்கும் மேற்பட்ட மாணவிகள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த திடீர் சம்வத்தால், பல்கலைக்கழக வளாகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

சிவாய நம சிவாய நம விண்ணை பிளக்க நடராஜர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

தமிழகத்தில் 40 ஆயிரம் காவலர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும்

தம்பதியின் உறவினர்கள் 2 பேர் கைது