Thursday, July 4, 2024
Home » காமன்வெல்த் பாக்சிங்கில் இந்தியாவுக்கு 3 தங்கம்: நீத்து, பாங்கல், நிக்கத் அசத்தல்

காமன்வெல்த் பாக்சிங்கில் இந்தியாவுக்கு 3 தங்கம்: நீத்து, பாங்கல், நிக்கத் அசத்தல்

by kannappan

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், நேற்று ஒரே நாளில் ஆண்கள் ட்ரிபிள் ஜம்ப் மற்றும் பாக்சிங்கில் 4 தங்கப் பதக்கங்களை அள்ளிய இந்தியா பதக்க பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.  மகளிர் குத்துச்சண்டை 45-48 கிலோ மினிமம்வெயிட் பிரிவு பைனலில் இங்கிலாந்தின் டெமி ஜேட் ரெஸ்டானுக்கு எதிராகக் களமிறங்கிய இந்திய வீராங்கனை நீத்து கங்காஸ் (21 வயது) 5-0 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். அடுத்து ஆண்கள் குத்துச்சண்டை 48-51 கிலோ பிளைவெயிட் பிரிவு பைனலில் இந்திய வீரர் அமித் பாங்கல் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் இங்கிலாந்தின் கியாரன் மெக்டொனால்டை வீழ்த்தி முதலிடம் பிடித்தார். கடந்த முறை ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்த காமன்வெல்த் போட்டியில் இவர் வெள்ளி வென்றிருந்தார். மகளிர் 48-50 கிலோ லைட் பிளைவெயிட் பிரிவு இறுதிப் போட்டியில் வடக்கு அயர்லாந்து வீராங்கனை கார்லி மெக்நாலின் சவாலை எதிர்கொண்ட இந்திய நட்சத்திரமும் உலக சாம்பியனுமான நிக்கத் ஜரீன் அதிரடியாக விளையாடி 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். காமன்வெல்த் பாக்சிங்கில் நேற்று ஒரே நாளில் 3 தங்கப் பதக்கங்களும், ஆண்கள் ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் எல்தோஸ் வென்ற தங்கமும் சேர்த்து இந்தியா 17 தங்கம், 13 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 49 பதக்கங்களுடன் 5வது இடத்தில் உள்ளது….

You may also like

Leave a Comment

12 + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi