காபூலில் பயங்கரம் பள்ளியில் குண்டுவெடிப்பு: 6 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் உயர்நிலை பள்ளியில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து சிதறியது. இதில் பள்ளி மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்தனர். 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்கானிஸ்தானில் மேற்கு காபூலில் உயர்நிலைப்பள்ளி ஒன்றில் நேற்று காலை திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. தொடர்ந்து மூன்று இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் பள்ளி மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்தனர். இந்த பகுதியில் ஷியா ஹசாரா சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்களை குறி வைத்து சன்னி தீவிரவாத குழுக்கள்  தாக்குதல் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இந்த குண்டு வெடிப்பில் ஷியா சமூகத்தை சேர்ந்த சிலர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. மேலும் காயமடைந்த பள்ளி மாணவர்கள் உட்பட ஷியா பிரிவை சேர்ந்தவர்கள் மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால், குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்ததாகவும், 14 பேர் காயமடைந்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு எதிராக ஐஎஸ் தீவிரவாதிகள் உள்ளனர். இதனால், ஐஎஸ் தீவிரவாதிகள் இந்த நாசவேலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது….

Related posts

போர்க்களத்தில் உள்ள இந்தியர்களை விடுவிக்க ரஷ்யா முடிவு

ஒரு வாரகாலம் துவம்சம் செய்து வந்த பெரில் புயல் கரையை கடந்தது: டெக்ஸாஸ் மாகாணத்தில் 25 லட்சம் மக்கள் தவிப்பு

உக்ரைன் நகரங்கள் மீதான ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் 36 பேர் உயிரிழப்பு