காதலித்து கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுப்பு

 

விருத்தாசலம், மே 5: விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 29 வயது பெண். இவரும், அதே பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் பழனிசாமி(29) என்பவரும் கடந்த 2018ம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். அப்போது, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததால் 2019ம் ஆண்டு அப்பெண் கர்ப்பமானார்.

இதற்கு பழனிசாமி, இந்த கர்ப்பத்தை கலைத்தால் தான் திருமணம் செய்து கொள்ள முடியும். அதனால் கர்ப்பத்தை கலைத்து விடு, அடுத்த வருடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி, அதற்கான மருந்து மாத்திரைகளை வாங்கி கொடுத்து கர்ப்பத்தை கலைத்துள்ளார். இதையடுத்து ஒரு வருடம் சென்றபிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பழனிசாமியிடம் கேட்டதற்கு திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்துள்ளார்.

மேலும் அப்பெண் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பழனிசாமியின் பெற்றோர் மற்றும் உறவினரான விளக்கப்பாடி கிராமத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன் மகன் சக்திவேல் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சாதியை சொல்லி இழிவாக திட்டி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இது குறித்து அப்பெண் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், பழனிசாமி மற்றும் சக்திவேல் ஆகிய இருவர் மீது இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, பழனிசாமியை கைது செய்தனர். மேலும் தலைமறைவான சக்திவேலை தேடி வருகின்றனர்.

Related posts

நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதியளித்த முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: மண்பாண்ட தொழிலாளர்கள், விவசாயிகள் பாராட்டு

மலைக்கோட்டை கோயிலுக்கு சொந்தமான ரூ.3.25 கோடி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு

தொடர் டூவீலர் திருட்டு இருவர் மீது ‘குண்டாஸ்’ மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை