காட்பாடி ரயில் நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்த 15 கிலோ கஞ்சா பறிமுதல்

 

வேலூர், மார்ச் 17: காட்பாடி ரயில் நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்த 15 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் கஞ்சா, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எஸ்பி மணிவண்ணன் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். காட்பாடி இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் நேற்று காட்பாடி ரயில் நிலையம், பஸ் நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கேட்பாரற்று நிலையில் ஒரு பை கிடந்தது. அதை பிரித்து பார்த்தபோது 3 பொட்டலங்களில் 15 கிலோ கஞ்சா இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சாவை கடத்தி வந்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை