காட்பாடி ரயில்வே பாலம் மூடப்பட்டதால் மாற்று பாதையில் நெரிசலில் சிக்கி திணறும் வாகன ஓட்டிகள்

* மண்சாலையில் புதைந்த கார் டயர் * தெளிவான வழிகாட்டுதல் தேவைவேலூர்: காட்பாடி ரயில்வே பாலம் மூடப்பட்டதால் மாற்றுப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி திணறுகின்றனர். தெளிவான வழிகாட்டுதல் இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். காட்பாடி ரயில்வே மேம்பாலம் தமிழகம்-ஆந்திராவை இணைக்கும் மிக முக்கிய பாலமாக உள்ளது. இந்த பாலம் வலுவிழந்து காணப்பட்டதால் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது இறுதி கட்டமாக சீரமைக்கும் பணிகள் கடந்த 1ம் தேதி தொடங்கியதால் காட்பாடி ரயில்வே மேம்பாலம் மூடப்பட்டது. இதனால் வேலூரில் இருந்து ரயில்வே பாலத்தை கடக்கும் வாகன ஓட்டிகள் காட்பாடி ஓடைபிள்ளையார் கோயில் அருகே இடது புறமாக கழிஞ்சூர் ஏரிக்கு செல்லும் சாலையை பயன்படுத்துகின்றனர். அதேபோல் பழையகாட்பாடி சாலை வழியாகவும் செல்கின்றனர். இந்த 2 சாலைகளுமே மண்சாலைகளாக, குண்டும் குழியுமாக இருக்கிறது. இதுநாள் வரையில் அதிகளவிலான வாகன போக்குவரத்து இல்லாமல் இருந்து, தற்போது 24 மணிநேரமும் வாகன போக்குவரத்தாக மாறிவிட்டது. எனவே அந்த பகுதியில் குடிநீர் பைப்லைன்கள் உடைப்பு ஏற்பட்டு, கார்கள், ஆட்டோக்கள் சிக்கிக்கொண்டு நெரிசலில் தவிக்கும் நிலையாக உள்ளது. இந்த சாலைகளில் ஆம்புலன்ஸ்கள் வந்தால், அவசரகதிக்கு செல்ல முடியாத நிலையாக உள்ளது. மேலும் வேலூரில் இருந்து ஆந்திராவிற்கு செல்லும் வாகனங்கள் எந்த பாதையில் செல்ல வேண்டும் என்று தெளிவான வழிகாட்டுதல் பலகைகள் ஆங்காங்கே வைக்கவில்லை. இதனால் எந்த திசையில் செல்வது என்று தெரியாமல் வெளிமாநில வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். அதேபோல் ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களும் வேலூர் வருவதற்கு எந்த சாலையை பயன்படுத்த வேண்டும் என்று தெளிவாகன வழிகாட்டுதல் பலகை இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றி அலைய வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதோடு இந்த மாற்றுப்பாதையில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய அளவில், இரவு நேரங்களில் தெரியும் வகையில் வழிகாட்டி பலகைகள் வைக்க வேண்டும். மேலும் இது மாற்றுப்பாதையாக இருந்தாலும் கூட, இந்த சாலைகளை வேலூர் மாவட்ட மக்கள் தினசரி பயன்படுத்தி வருகின்றனர். எனவே இந்த மாற்றுப்பாதைகளில் தரமான தார்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.அருப்புமேடு- கிளித்தான்பட்டறை இடையே போலீஸ் பூத் வேண்டும்காட்பாடி ரயில்வே பாலம் மூடப்பட்டதால், காட்பாடி கழிஞ்சூர் ஏரிக்கு செல்லும் சாலை, பழைய காட்பாடி ஆகிய 2 சாலைகளையும் மாற்று பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் கழிஞ்சூர் ஏரிக்கு செல்லும் சாலையில் அருப்புமேடு-கிளித்தான்பட்டறை இடையே டாஸ்மாக் கடைகள் இயங்கி வருவதால், இரவு நேரங்களில் பணி முடித்து செல்லும் பெண்கள், கல்வி பயின்று செல்லும் மாணவிகள் அச்சமின்றி சென்றுவருவதற்கு, அருப்புமேடு-கிளித்தான்பட்டறை இடையே தற்காலிகமாக போலீஸ் பூத் அமைக்க வேண்டும்.பழைய காட்பாடி சாலையில் 2 இடங்களில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதைகளில் ஒரு பாதையை வேலூர்-ஆந்திரா செல்லவும், மற்றொரு பாதையை ஆந்திரா-வேலூர் என்று மாற்றி, அப்பகுதியில் போலீஸ் பாய்ண்ட் போட வேண்டும். இப்படி அமைத்தால் தான் வாகனங்கள் நெரிசலில் சிக்காது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்….

Related posts

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு