காட்பாடி சார் பதிவாளராக பொறுப்பு அதிகாரி நியமனம் மருத்துவ விடுப்பில் சென்றதால் நடவடிக்கை ₹12 லட்சம் பணம் பறிமுதல்

வேலூர், ஜூன் 25:₹12 லட்சம் பணம் பறிமுதல் தொடர்பாக காட்பாடி சார் பதிவாளர் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். அவருக்கு பதிலாக பொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.காட்பாடியில் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 19ம் தேதி இரவு வேலூர் விஜிலென்ஸ் போலீசார் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது, அலுவலகத்தின் பல்வேறு இடங்களில் கணக்கில் வராத ₹2.14 லட்சம் பணம் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.இதையடுத்து, வேலூர் அடுத்த கீழ்வல்லம் பகுதியில் உள்ள காட்பாடி சார் பதிவாளர்(பொறுப்பு) நித்தியானந்தத்துக்கு சொந்தமான வீட்டில் கடந்த 20ம் தேதி வீட்டில் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ₹13 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ₹12 லட்சம் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் மண்ணில் புதைக்கப்பட்டு இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சார் பதிவாளர் நித்தியானந்தம், விஜிலென்ஸ் ரெய்டு, பணம் பறிமுதல் தொடர்பாக அறிக்கை பதிவுத்துறை அதிகாரிகள், ஐஜி அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில், சார் பதிவாளர் நித்தியானந்தம், மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். காட்பாடி சார் பதிவாளர் பொறுப்பாக பிரகாசம் என்பவர நியமிக்கப்பட்டுள்ளதாக பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு