காட்டு மாடுகளால் விவசாயம் பாதிப்பு

 

சிங்கம்புணரி, ஜூலை 21: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் மலைகள் நிறைந்த பகுதியாகும். மாவட்டத்திலேயே எஸ்.புதூர் ஒன்றியத்தில் தான் அதிகளவில் தோட்ட பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. இங்கு அதிக அளவில் மிளகாய், கத்தரி, வெண்டை, புடலை, கொடி வகைகள், கடலை, நெல் ஆகியவை அதிக அளவில் பயிரிடப்பட்டு விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.

இடைத்தரகர் வியாபாரிகளிடமிருந்து காய்கறிச்செடி நாற்றுகளை வாங்கிக் கொண்டு பின்னர் விளைந்த பொருட்களை வியாபாரிகளிடமே விவசாயிகள் சொற்ப விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். தண்ணீர் இன்றி வானம் பார்த்த பூமியாக உள்ள விவசாயிகளுக்கு, இப்பகுதியில் மேல வண்ணாயிருப்பு, நல்லவன்பட்டி, தர்ம பட்டி, செட்டி குறிச்சி உள்ளிட்ட பகுதியில் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக காட்டு மாடுகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. எனவே வனத்துறையினர் காட்டு மாடுகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்