காட்டுமன்னார்கோவில் அருகே மணல் திருட பயன்படுத்திய 7 இருசக்கர வாகனம் பறிமுதல்

காட்டுமன்னார்கோவில், ஜூலை 26: காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள கீழ கஞ்சக்கொல்லை கிராம பகுதியில் காட்டுமன்னார்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள கொள்ளிடம் ஆற்றில் இருந்து 3 பேர் இரண்டு சக்கர வாகனத்தில், சாக்கு மூட்டையில் மணல் எடுத்து வந்தனர். போலீசாரை பார்த்தவுடன் இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதேபோல் அதே பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி வழியாகவும், கிராம நிர்வாக அலுவலகம் வழியாகவும் இரண்டு சக்கர வாகனத்தில் ஆற்றில் இருந்து மூட்டை மூட்டையாக மணல் திருடி வந்தவர்களும் போலீசாரை பார்த்தவுடன் வாகனத்தை விட்டு விட்டு தப்பிசென்றனர்.இதையடுத்து மணல் திருட்டுக்கு பயன்படுத்திய 7 இரண்டு சக்கர வாகனத்தையும், 21 சாக்கு மூட்டை மணலையும் போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்