காட்டுப்பன்றியை சுட்டுப்பிடிக்க அனுமதி கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், ஜூலை 23: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் மனோஜ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பயிர் சேதத்திற்கு முழுமையான நஷ்டஈடு வழங்க வேண்டும், வனவிலங்குகளால் ஏற்பட்ட காயங்கள், பாதிப்புகளுக்கு முழுமையான மருத்துவ சிகிச்சையை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வனவிலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும், வனவிலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க வனத்துறை மூலம் சோலார் மின்வேலி அமைத்துக் கொடுக்க வேண்டும். அகத்தாகுளம் ஊராட்சி, நந்தகுளம் ஊராட்சிகளில் தொழிற்பேட்டை என்ற பெயரில் விளைநிலங்களை விவசாயிகளிடம் இருந்து பறிக்க கூடாது. விவசாயத்தை பாழாக்கும் காட்டுப்பன்றியை நிபந்தனையின்றி சுட்டுப்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும். காட்டுப்பன்றிகளை கேரளாவை போல் அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க கோஷம் எழுப்பினர்.

 

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி