காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்: இழப்பீடு கேட்டு விவசாயிகள் மனு

 

பழநி, நவ.24: திண்டுக்கல் மாவட்டத்தில் 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பெரிய வனப்பரப்பைக் கொண்டது பழநி வனச்சரகம். காட்டு விலங்குகள் அடிக்கடி உணவு மற்றும் குடிநீர் தேடி வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன. இவைகளை தடுக்க வனத்துறையினர் சோலார் மின்வேலி அமைத்தல், அகழி அமைத்தல், பட்டாசு வெடித்தல், அதிக ஒளிச்செறிவு கொண்ட விளக்குகள் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டும் பலனில்லை.

இந்நிலையில் பழநி அருகே நால்ரோடு, வட்டமலைப்புதூர், கோட்டத்துறை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று பழநி வனச்சரக அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். தங்கள் தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதம் செய்து விட்டதாகவும், சில நேரங்களில் மனிதர்களையே தாக்குவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறி மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.

Related posts

பைக்கில் மணல் கடத்தியவர் கைது

நடமாடும் கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸில் பணியாற்ற 84பேர் தேர்வு

₹12 லட்சத்துக்கு பருத்தி ஏலம்