காட்டுநாயக்கர் மக்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கக் கோரி கம்யூனிஸ்ட் கையெழுத்து இயக்கம்

திருச்சுழி, ஆக.10: திருச்சுழியில் காட்டுநாயக்கர் சமுதாய மக்களுக்கு சாதிச்சன்றிதழ் வழங்ககோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர். திருச்சுழியில் சுமார் 800க்கும் மேற்பட்ட காட்டுநாயக்கர் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்ககோரி பல வருடங்களாக போராடி வருகின்றனர். இருப்பினும் இதுவரை சாதிச்சான்றிதழ் வழங்கப்படாததால் வேலைக்கு செல்லமுடியாமல் உள்ளதாகவும், தமிழக அரசால் வழங்ககூடிய சலுகைகள் கிடைக்கவில்லை எனவும் கூறுகின்றனர்.

இந்த கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல நேற்று சர்வதேச பழங்குடி மக்கள் தினத்தை முன்னிட்டு, திருச்சுழியில் வாழக்கூடிய காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த பழங்குடி இன மக்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு கையெழுத்து இயக்கம் நடத்தினர். இந்த இயக்கத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளைச்செயலாளர் செந்தூர்பாண்டி தலைமை தாங்கினார். திருச்சுழி ஒன்றிய செயலாளர் செல்வம் மற்றும் கிளைச்செயலாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர். இந்த இயக்கத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு