காட்டுக்குளம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட அடையாள அட்டை கேட்டு கோரிக்கை

முசிறி, ஏப்.21: முசிறி ஒன்றியத்தில் காட்டுக்குளம் ஊராட்சியில் சுமார் 30 கூலித்தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் அடையாள அட்டை கடந்த இரண்டு வருடங்களாக வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து கூலி தொழிலாளர்கள் முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் வந்து ஒன்றிய ஆணையர் சந்திரசேகரனிடம் இது குறித்து முறையிட்டனர். அதற்கு பதில் அளித்த ஒன்றிய ஆணையர் சந்திரசேகரன் தொழிலாளர் கூறிய அடையாள அட்டை இன்னும் ஒரு வார காலத்திற்குள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தொழிலாளர்கள் தனித்தனியாக கோரிக்கை மனு எழுதி தருமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் தனித்தனியாக கோரிக்கை மனு எழுதி ஒன்றிய ஆணையரிடம் வழங்கி சென்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை