காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 150 பக்தர்கள் கயிறு கட்டி மீட்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே அய்யனார் கோயில் ஆற்றில் நேற்று மாலை காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 150க்கும் மேற்பட்ட பக்தர்களை, போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அய்யனார் கோயிலுக்கு நேற்று ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் சாமி கும்பிட சென்றனர். மாலை 3 மணி அளவில் திடீரென மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து அய்யனார் கோயில் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஓடியது. சாமி தரிசனம் முடிந்த பொதுமக்கள் ஆற்றின் அக்கரையில் இருந்து வரமுடியாமல் தவித்தனர். தகவலறிந்து போலீசார், வருவாய்த்துறை, தீயணைப்பு துறையினர் வந்து ஆற்றில் உள்ள மரங்களில் கயிறு கட்டி 150க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டனர்….

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை