காஞ்சி, சென்னை, கோவை, திருச்சி உள்பட 9 மாவட்டங்களை சேர்ந்த அதிமுக போட்டி வேட்பாளர்கள் டிஸ்மிஸ்: ஒபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: மதுரை, காஞ்சி,சென்னை, கோவை, திருச்சி உள்பட 9 மாவட்டங்களை சேர்ந்த, அதிமுக போட்டி வேட்பாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெறுதல், அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுதல் முதலான காரணங்களால்சென்னை புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த லியோ சுந்தரம் (மாவட்டக் கழக முன்னாள் பொருளாளர் ), பாக்கியராஜ் (மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத் தலைவர்), கார்த்திக் (சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்), மஞ்சுளா (ஆலந்தூர் கிழக்கு பகுதி மகளிர் அணி இணைச் செயலாளர் ), பவானி, (161-வது வட்டக் கழக இணைச் செயலாளர் ), காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் (வாலாஜாபாத் கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் ), கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த, மகாலட்சுமி, (பொள்ளாச்சி நகர மகளிர் அணி துணைத்தலைவர்), வீடியோ நாச்சி (எ) நாச்சிமுத்து (பொள்ளாச்சி நகர 35-ஆவது வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி)வேல்முருகன் (பொள்ளாச்சி நகர 14வது வார்டு ஜெயலலிதா பேரவை செயலாளர்), சுசீலா (பொள்ளாச்சி நகர 9வது வார்டு கழக முன்னாள் மேலமைப்பு பிரதிநிதி ), ராம் (பொள்ளாச்சி நகர 15வது வார்டு கழக முன்னாள் மேலமைப்பு பிரதிநிதி), ராதாமணி (5-வது வார்டு, பள்ளபாளையம் பேரூராட்சி), கோவை புறநகர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த,ஜி.அஜய் (காளப்பட்டி பகுதி மாணவர் அணி துணைச்செயலாளர்), ஆனந்தகுமார் (5வது வட்டக் கழக துணைச்செயலாளர் ), கோவை மாநகர் மாவட்டத்தை சேர்ந்த குணாளன் (எ) குணசேகரன் (மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர்), சிங்கை ஜான் (எ) ஜான் பிலிப் (மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர்), விஜயன் (எ) செந்தில் (மாவட்ட அமைப்பு சாரா உடலுழைப்பு மற்றும் கட்டுமான பிரிவு அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் )பாண்டியன் (எ) பால்பாண்டியன் (உக்கடம் பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளர் ), ரமேஷ் (சங்கனூர் பகுதி ஜெயலலிதா பேரவை துணைத் தலைவர்), கோகிலாமணி (26-ஏ வட்டக் கழக துணைச் செயலாளர்), திருச்சி மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தேவரூபன் (மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ), மதுரை மாநகர் மாவட்டத்தை சேர்ந்த வடிவேலு, (மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் ), லட்சுமி (மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் ), ராஜலட்சுமி (மதுரை வடக்கு 1ம் பகுதி மகளிர் அணி செயலாளர் ), பேச்சி ரவிச்சந்திரன், (மதுரை வடக்கு 2-ம் பகுதி மகளிர் அணித் தலைவர் ), ஒச்சாத்தேவர் (6 கிழக்கு வட்டக் கழகச் செயலாளர், மதுரை வடக்கு 3-ம் பகுதி), மாரிமுத்து (19 வடக்கு வட்டக் கழகச் செயலாளர், மதுரை மேற்கு 4-ம் பகுதி ), ராஜா சீனிவாசன் (93 வடக்கு வட்டக் கழகச் செயலாளர், மதுரை மேற்கு 3-ஆம் பகுதி ), கணேசன், (15 வடக்கு வட்டக் கழகச் செயலாளர் )சின்னமுருகன் (100 கிழக்கு வட்டம், மதுரை மேற்கு 3ம் பகுதி), ராஜபாண்டியன் (20-வது வட்டம், மதுரை மேற்கு 4-ஆம் பகுதி), மேலமடை ஜெயக்குமார் (30 கிழக்கு வட்டம், மதுரை வடக்கு 5-ம் பகுதி )கண்ணகி பாஸ்கர் (80-வது வட்டம், மதுரை மத்திய 5-ம் பகுதி ), பாஸ்கரன் (30 வடக்கு வட்டக் கழகப் பொருளாளர் ), சந்திரன் (46-ஆவது வட்டம், மதுரை வடக்கு 1ம் பகுதி ), நாகராஜன் (90 வடக்கு வட்டக் கழக மேலமைப்பு பிரதிநிதி )செல்வி (76 மேற்கு வட்டம், மதுரை மேற்கு 3-ம் பகுதி ), மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி (மாவட்ட விவசாயப் பிரிவு இணைச் செயலாளர் ), தெட்சிணாமூர்த்தி (வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி கழக அவைத் தலைவர் ), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ரபீக் (சிங்கம்புணரி பேரூராட்சி 1-வது வார்டு கழக செயலாளர் )நித்யா ஜெயங்கொண்டான் (சிங்கம்புணரி பேரூராட்சிக் கழக மாவட்டப் பிரதிநிதி ), தேன்மொழி (5-வது வார்டு, சிங்கம்புணரி பேரூராட்சி ) ஆகியோர், இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.அதிமுகவினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.அந்த வகையில் அமைப்பு ரீதியாக 9 மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு பொறுப்புகளை வகிக்கும் நிர்வாகிகள் கட்சியில் நீக்கப்பட்டுள்ளனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்