காஞ்சி கிருஷ்ணா கலை கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கீழம்பியில் அமைந்துள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் வேலைவாய்ப்பு தொடர்பான கருத்தரங்கு  நடந்தது. கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் காஞ்சனா வரவேற்றார். கல்லூரி அறக்கட்டளை தாளாளர் அரங்கநாதன், தலைவர் மனோகரன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மோகனரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவன நிர்வாகி குமார் கலந்துகொண்டு வேலை வாய்ப்பு தொடர்பான கருத்துகளை கூறினார். தொடர்ந்து ஹேண்ட் இன் ஹேண்ட் அலுவலர் கணேஷ்குமார், மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டால் எளிதில் வேலைவாய்ப்புகளை பெறலாம் என்று பேசினார். இதில், முனைவர் பேபி மற்றும் கல்லூரி பேராசியர்கள் அனைத்துத் துறை மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்