காஞ்சியில் வைகாசி பிரமோற்சவம் வைகுண்ட பெருமாள் கோயிலில் கருடசேவை உற்சவம்: திரளான பக்தர்கள் தரிசனம்

 

காஞ்சிபுரம்: காஞ்சியில் வைகாசி பிரமோற்சவ விழாவையொட்டி, வைகுண்ட பெருமாள் கோயிலில் கருடசேவை உற்சவம் விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரத்தில் வரலாற்று சிறப்பும், 108 வைணவ கோயில்களில் ஒன்றாக வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், வைகாசி மாத பிரமோற்சவ விழா கடந்த 1ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 3வது நாள் நிகழ்வான கருடசேவை உற்சவம் நேற்று நடைபெற்றது.

விழாவையொட்டி, தினம்தோறும் காலையிலும், மாலையிலும் வைகுண்ட பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வரவுள்ளார். விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் வரும் 7ம்தேதியும், தீர்த்தவாரி உற்சவம் 9ம்தேதியும் நடைபெறுகிறது. மேலும், 13ம்தேதி இரவு வைகுண்ட பெருமாள் புஷ்பப்பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்வுடன், வைகாசி திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வஜ்ஜிரவேலு மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்