காஞ்சியில் தொடர் மழையால் 10,000 ஏக்கர் பயிர்கள் சேதம்: சேத விவரங்களை கணக்கிட்டு இழப்பீடு வழங்க கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த தொடர்மழையால சுமார் 10,000 ஏக்கரில் ஆன நெல், கரும்பு, வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்கள் நீரில் முழ்கி சேதமடைந்துள்ளன. மாண்டஸ் புயல் மற்றும் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாண்டஸ் புயல் கரையை கடந்தது அடுத்து தமிழகத்தின் வட மாவட்டங்களில் சுமார் ஒருவாரம் கனமழை நீடித்தது. காஞ்சிபுரத்தில் இடைவிடாது பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நெற்பயிர்கள் நீரில் முழ்கி சேதமடைந்தன. இதைப்போல நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்பு, வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்களும் முழுமையாக சேதம் அடைந்துள்ளன. லட்ச கணக்கில் செலவு செய்து பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது ஏற்பட்டுள்ள இழப்பால் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பயிர்சேதங்களை உடனடியாக கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியத்திற்கு உள்பட்ட ராஜாக்கப்பட்டி, புகையிலைப்பட்டி பகுதிகளில் பெய்த தொடர் மழையால் செண்டுமல்லி பூக்கள் செடியிலேயே அழுகி உள்ளன. மார்கழி மாதத்தில் செண்டுமல்லி விற்பனை அதிகரித்து வருவாய் ஈட்டலாம என காத்திருந்த விவசாயிகள் இப்பொழுது பல லட்சக்கணக்கான ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். இதனிடையே கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடியை பேரிடர் பகுதிகளாக அறிவிக்கக் கோரி விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். கொள்ளிடம் கடை வீதியில் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் தலா ரூ.5000 பாதிக்கப்பட்ட விலை நிலங்களுக்கு இழப்பீடு வழங்க கோரி முழக்கங்கள் எழுப்பினர். போராட்டம் காரணமாக சீர்காழி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 5 கி.மீ தொலைவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது….

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்