காஞ்சியில் திடீர் மழை

காஞ்சிபுரம்: கத்திரி வெயில் தொடங்கி, கடந்த சில நாட்களாக தினமும் அனல் காற்று வீசியது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். முதியோர், குழந்தைகள், நோயாளிகள் என பலரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். இந்தவேளையில், கடந்த சில நாட்களாக, காஞ்சிபுரம் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை வெயில் சுட்டேரித்தது. பின்னர், லேசான தூரலும், வெயிலும் என மாறி மாறி காலநிலை மாற்றமாக இருந்தது. மாலை 4 மணியளவில், திடீரென கருமேகம் சூழ்ந்து கனமழை பெய்தது. சுமார் ஒன்றரை மணிநேரம் பெய்த மழையால் காஞ்சிபுரம் பஸ் நிலையம், பழைய ரயில் நிலைய சாலை, ராஜவீதி, ஓரிக்கை உள்பட பல இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி