காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட பொது உறுப்பினர் கூட்டம் வருகிற 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற பணிகளை தொடங்க வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் வண்டலூர் – படப்பை சாலையில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அவை தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் கருணாநிதி எம்எல்ஏ, வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ, மூர்த்தி மற்றும் மாவட்ட பொருளாளர் விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளரும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டார்.

பின்னர், திமுக தீர்மானங்களை விளக்கி பேசுகையில், ‘வருகிற 2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் களம் காத்திருக்கும் நிலையில், தொடர் இமாலய வெற்றிகளைப் குவித்து வரும் வெற்றித் தலைவர் – மு.க.ஸ்டாலினின் சீரிய தலைமையில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் மகத்தான சரித்திர வெற்றியை பெற்று, திராவிட மாடல் சாதனை ஆட்சி மீண்டும் அமைந்திட, நம்முடைய காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள திமுகவினர் அனைவரும் ஓர் அணியில் திரண்டு இன்றில் இருந்தே சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்கிடுவது என்று காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக ஏகமனதாக தீர்மானிக்கிறது’ என்றார்.

இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் செல்வம், தலைமை தீர்மானக்குழு செயலாளர் வைதியலிங்கம், முன்னாள் எம்எல்ஏக்கள் தமிழ்மணி, இதயவர்மன், ஆர்.டி.அரசு, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ், ஒன்றிய செயலாளர்கள் வந்தேமாதரம், ஆப்பூர் பி.சந்தானம், லோகநாதன், நகர செயலாளர்கள் நரேந்திரன், சண்முகம், எம்.கே.டி.கார்த்திக், பேரூர் செயலாளர்கள் தேவராஜ், யுவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி