காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஆர்த்தி நேற்று தொடங்கி வைத்தார்.தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் நேற்று முன்தினம் முதல் துவங்கின. துவங்கிய முதல் நாளே முதல் கல்வி பருவ பாடப்புத்தகங்கள் அனைத்து மாணவருக்கும் வழங்கப்பட்டது. கடந்த, 2 ஆண்டுகளாகவே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் நடைபெற்று வந்த நிலையில், போதிய வருமானம் இல்லை என்பதால் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்த இயலாமல் பெற்றோர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். பெற்றோர்கள் தனியார் பள்ளியிலிருந்து தங்கள் குழந்தைகளின் மாற்று சான்றிதழ் பெற்று அருகில் உள்ள அரசு பள்ளிகளின் சேர்த்தனர்.இதனை தற்போது பள்ளிக்கல்வித்துறை மேலும் விழிப்புணர்வு செய்து அரசு பள்ளிகளில் வழங்கப்படும் தரமான கல்வி, மாணவர்களுக்கான உதவித்தொகை, இலவச உபகரணங்கள், பாடப்புத்தகங்கள் அனைத்தும் வழங்கி பாதுகாப்பாக மாணவர்கள் இருப்பதால் இதனை பொதுமக்களுக்கு அதிக அளவில் விழிப்புணர்வு செய்து அரசு சேர்க்கை கூடுதலாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது.அவ்வகையில், மாவட்ட ஆட்சியர் காலனி அருகில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் நேற்று பொதுமக்களுக்கான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி துவக்கி வைத்தார். இப்பேரணியில், ஆசிரியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அரசுப்பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அரசு சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும். இலவச உபகரணங்கள் கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை குறித்த பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இப்பேரணியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன்,  மாமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், பானுபிரியா சிலம்பரசன், ஆசிரியர்கள், பள்ளி கல்வித்துறை அலுவலர்கள்‌ என பலர் கலந்து கொண்டனர்….

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக சிபிசிஐடி சோதனை

முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சியில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக சிபிசிஐடி சோதனை