காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

காஞ்சிபுரம், மார்ச் 7: காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய காஞ்சிபுரம் பகுதியில் ₹4.6 கோடி மதிப்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் மூலம் கட்டப்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு மார்க்கெட் கட்டிட பணி மற்றும் தேரடி தெருவில் ₹25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தையும் கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து, மளிகை தெருவில் உள்ள ரேஷன் கடையினை ஆய்வு செய்த கலெக்டர், பொருட்களின் இருப்பு, பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்து, ரேஷன் பொருட்கள் வாங்கும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும், ரேஷன் கடை ஊழியர்களிடம் கடையினை சுத்தமாக வைத்துக்கொள்ள அறிவுரை வழங்கினார்.ஆய்வின்போது, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன், மாநகராட்சி பொறியாளர் கணேசன், மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு