காஞ்சிபுரம் மாநகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம்

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மாதாந்திரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமை தாங்கினார். ஆணையர் கண்ணன், துணை மேயர் குமரகுருநாதன் உள்ளிட்ட 51 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்களும், மேயரும் மாநகராட்சியில் நடந்து பணி திட்டங்களுக்கும், வேலைகளும் மாமன்ற உறுப்பினர்கள் முன் வழிமொழியப்பட்டு ஒப்புதல் பெற்று பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் கோரி பணிகள் துவங்கப்படும் என மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ் தொரிவித்தார்.

இதனுடைய மாநகராட்சி 46வது மாமன்ற உறுப்பினர் கயல்விழி 46வது வார்டில் வசிக்கும் பழங்குடியினர் மக்களுக்கு தேவையான சாலை, கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பலமுறை கூறியும் இதுவரை நடைபெறவில்லை என மாநகராட்சி மேயர் மகாலட்சுமியிடம் கூறினார். அப்போது, இதுகுறித்து ஏற்கனவே மாநகராட்சி பொறியாளரிடம் பணி நடைபெற வேண்டுமென கூறி விட்டேன் என மேயர் பதில் அளித்தார்.

உடனே ஆவேசம், அடைந்த மாமன்ற உறுப்பினர் கயல்விழி நிர்வாகம் மெத்தனமாக உள்ளது. தங்களிலேயே பதிலிலேயே தெரிகிறது என கூறியதும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி கூச்சலிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார். அதற்கு, பாஜ மாமன்ற உறுப்பினரும், அதிமுக மாமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து ஒருவருக்கொருவர் இருப்பிடத்தை விட்டு வெளியே வந்து கூச்சலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை