காஞ்சிபுரம் பகுதிகளில் கட்டப்படும் சுகாதார மையங்களை கலெக்டர் ஆய்வு

காஞ்சிபுரம், மே 12: காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் கட்டப்படும் வரும் நகர்புற சுகாதார மைய கட்டிடங்களை கலெக்டர் ஆர்த்தி நேரில் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் நகர்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மைய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட உப்பேரிகுளம், பல்லவன் நகர், மகாலிங்கம் நகர், விஷ்ணு நகர், திருவீதிபள்ளம் போன்ற பகுதிகளில் தலா ₹25 லட்சம் மதிப்பில் 5 இடங்களில் ₹1,25,00,000 நிதியுதவியில் கட்டப்பட்டு வரும் நகர்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மைய கட்டிடங்கள் கட்டும் பணி மற்றும் கட்டி முடிக்கப்பட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், கட்டப்பட்டு வரும் பணிகளை விரைவில் முடிக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு, அறிவுரைகள் வழங்கினார். ஆய்வின்போது, உதவி கலெக்டர் (பயிற்சி) அர்பித்ஜெயின், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பிரியாராஜ், காஞ்சிபுரம் ஆணையாளர் கண்ணன், நகராட்சி அலுவலர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு