காஞ்சிபுரம் நகராட்சியை அலங்கரித்த தலைவர்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகராட்சி ஆரம்ப முதல் 17 பேர் சேர்மன் பதவியில் இருந்துள்ளனர். 3 பேர் 2 முறை பதவி வகித்துள்ளனர். பட்டு நகரம், கோயில் நகரம் என உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் நகராட்சி 1866ல் துவங்கியது. பல படிகளை தாண்டி மாநகராட்சியாக தரம் உயர்ந்து, தற்போதுள்ள நிலையில் இம்மன்றத்தை அலங்கரித்தவர்கள் விவரங்கள் வருமாறு. 1920 முதல் 2016 வரை 17 பேர் மாமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சாமிநாத முதலியார், சாம்பசிவ செட்டியார், டாக்டர் பி.எஸ்.சீனுவாசன் ஆகியோர் 2 முறை மாமன்ற தலைவராக இருந்தனர். இதில் டாக்டர் பிஎஸ் சீனிவாசன், 1941 முதல் 1952 வரை 11 ஆண்டுகள் தொடர்ந்து மன்ற தலைவராக இருந்தார்.அதேபோல்  திமுகவைச் சேர்ந்த சன் பிராண்ட் ஆறுமுகம், ராஜேந்திரன் ஆகியோர் அதிமுகவை சேர்ந்த தமிழக முன்னாள் வனத்துறை அமைச்சர் எஸ். எஸ்.திருநாவுக்கரசு, அவரது மனைவி மைதிலி ஆகியோர் மாமன்ற தலைவராக இருந்துள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் இதுவரை ஒரு பெண் மட்டுமே தலைமை பதவியில் இருந்தார். இந்தவேளையில், தற்போது நடைபெற உள்ள தேர்தல் மூலம் முதல் பெண் மேயர் தேர்வு செய்யப்பட உள்ளார். கடந்த 1920 முதல் 2022 வரை என 100 ஆண்டுகளை காஞ்சிபுரம் நகராட்சி கடந்து வந்து, தற்போது மாநகராட்சியாக தரம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி