காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர் கனமழையால் 711 ஏரிகள் நிரம்பின

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் 711 ஏரிகள் நிரம்பியுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 151 ஏரிகள் 70 சதவீதத்துக்கும் மேல் நிரம்பியுள்ளன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் காஞ்சிபுரத்தில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளில் பாலாறு உப வடி நில கோட்டத்தின் கீழ் உள்ள 1022 ஏரிகளில் 272 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 267 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதில், 72 ஏரிகள் 70 சதவீதத்திற்கு அதிகமாகவும், 40 ஏரிகள் 50 சதவீதத்திற்கு அதிகமாகவும், 1 ஏரிகள் 25 சதவீதத்திற்கு அதிகமாகவும் நிரம்பியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 444 ஏரிகள் முழுவதும் நிரம்பியுள்ளன. இதில், 79 ஏரிகள் 70 சதவீதத்திற்கு அதிகமாக நிரம்பியுள்ளன. மாகரல், திருமுக்கூடல் ஆகிய தடுப்பணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் வாயலூர், ஈசூர், வள்ளிபுரம் தடுப்பணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி கடலில் கலந்து வருகிறது.புலிக்குகையை சூழ்ந்த மழைநீர்: மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையொட்டி சாலவான்குப்பம் கிராமத்தில், பல்லவர்களால் பாறையை குடைந்து செதுக்கப்பட்ட புலிக்குகை அமைந்துள்ளது. முக்கிய புராதன சின்னமாக இங்குள்ள ஒரு பாறையில் புலிகளின் தலைகளை சிற்பங்களாக செதுக்கியுள்ளனர். இப்பகுதி தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வடகிழக்கு பருவ மழையால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி 10 நாட்களுக்கு மேலாக மாமல்லபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும், கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் முதல் மீண்டும் பலத்த மழை பெய்தது. இதனால், புலிக்குகையில் 3 அடிக்கு மேல் மழைநீர் தேங்கியுள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதி என்பதால், தேங்கியுள்ள மழைநீரை உடனே அகற்ற தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 முக்கிய ஏரிகளில் நீர் இருப்பு விவரம்:காஞ்சிபுரம்    பரப்பளவு        கொள்ளளவு    நீர் இருப்புதாமல்        2307        18.00    18.00தென்னேரி    5858        18.60    18.25உத்திரமேரூர்    5636        20.00    19.10ஸ்ரீபெரும்புதூர்    1423        17.60    17.60பிள்ளைப்பாக்கம்    1096        13.17    13.20மணிமங்கலம்    2079        18.60    18.60செங்கல்பட்டு    பரப்பளவு        கொள்ளளவு    நீர் இருப்புகொளவாய்    627         15.00        11.20பாலூர்        2547        15.30        14.70பொன்விளைந்த களத்தூர்        1224        15.00        15.00காயார்        1178        15.70        15.07மானாம்பதி    1091        14.10        14.11கொண்டங்கி    1529        16.11        16.00சிறுதாவூர்        1027        13.60        13.07தையூர்        879        13.90        13.09மதுராந்தகம்    2853        23.30        23.90பல்லவன்குளம்    2165        15.70        15.70காஞ்சிபுரம் மாவட்ட மழையளவு (மி.மீட்டரில்)காஞ்சிபுரம்    17.20ஸ்ரீபெரும்புதூர்    20.20உத்திரமேரூர்    21.00வாலாஜாபாத்    12.40செம்பரம்பாக்கம்    36.20குன்றத்தூர்    27.00கொட்டும் மழையில் நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்காஞ்சிபுரம் கைத்தறித்துறை துணை இயக்குநர் அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் குடை பிடித்தபடி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கேஎஸ்பி கைத்தறி சங்கத் தலைவர் கமலநாதன் தலைமை தாங்கினார். கேஎஸ்பி பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் பி.வி.சீனுவாசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது, சட்டமன்ற நிதிநிலை கூட்டத் தொடரில் முதல்வர் அறிவித்த 10 சதவீத கூலி உயர்வு, 10 சதவீத பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும்.மழைக்கால நிவாரணமாக நெசவாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், நெசவாளர்களுக்கு கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட பணத்தை கொரோனா பேரிடர் நிதியில் சேர்த்து கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இறுதியில் காமாட்சியம்மன் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தை முடித்தார். இதில் நிர்வாகிகள் ஜெயராமன், கிருஷ்ணமூர்த்தி, தங்கராஜ், ராஜசேகர், விஜயராகவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்….

Related posts

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்

கோவை, நெல்லை மேயர்கள் திடீர் ராஜினாமா