காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்புள்ள 39 கிரவுண்ட் நிலம் மீட்பு: அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கை

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான 39 கிரவுண்ட் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் மீட்கப்பட்டது. பின்னர், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை பல்வேறு ஆக்கிரமிப்பாளர்கள் வாடகை செலுத்தாமல் பல ஆண்டுகளாக அனுபவித்து வந்தனர். அவ்வாறு வாடகை செலுத்தாத நபர்களிடமிருந்து இதுவரை 132 கிரவுண்ட் இடம் ஆக்கிரமிப்பில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. அந்த வகையில், தற்போது ஏ.வி.எஸ். தாமஸ் கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் 31 கிரவுண்ட் நிலம் மற்றும் ராவ் என்பவரிடம் இருந்து 8 கிரவுண்ட் நிலமும் ஆகமொத்தம் 39 கிரவுண்ட் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.250 கோடி ஆகும். மீட்கப்பட்ட இடத்தை அப்படியே விட்டு விடாமல் கோயிலுக்கு வருவாய் தரக்கூடிய வகையில் திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டு முதல்வரின் ஒப்புதலுடன் பணிகள் தொடங்கப்படும்.  பக்தர்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளோம். தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. எச்.ராஜா ஒன்றிய அரசின் பிரதிநிதியல்ல, அதனால் அவரின் விமர்சனங்களை கள் கருத்தில் கொள்ள மாட்டோம். சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் வழிபாட்டிற்கு இன்று (நேற்று) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி விஜயதசமியன்று கோயில திறப்பது குறித்து அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு