காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உண்டியல் காணிக்கை வசூல் ₹25.59 லட்சம்

காஞ்சிபுரம், ஆக.31: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டதில், பக்தர்கள் ₹25.59 லட்சத்தை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரிய ஸ்தலமாக விளங்குவது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில். இங்கு வரும் பக்தர்கள் கோயிலுக்கு வரும்போது செலுத்திய காணிக்கைகளை கோயில் சார்பில், 11 உண்டியல்கள் திறந்து கோயில் பணியாளர்கள் மற்றும் சேவா அமைப்பினர் சார்பில் நேற்று எண்ணப்பட்டது. இதில், உண்டியலில் ரொக்கமாக ₹24,20,187ம், கோசாலைக்கென தனியாக வைக்கப்பட்டிருந்த உண்டியலில் ரொக்கமாக ₹1,39,133ம் என மொத்தமாக ₹25 லட்சத்து 59 ஆயிரத்து 320 மற்றும் 5 கிரம் தங்கமும், வெள்ளி 1.120 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கோயில் அறங்காவலர் குழு தலைவர் வேல்மோகன் மற்றும் உறுப்பினர்கள் ஜெகன்னாதன், விஜயகுமார், கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமி ஆகியோர் மேற்பார்வையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இந்நிகழ்வில் அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் சீனிவாசன், வேலனரசு, ஆய்வாளர் பூங்கொடி ஆகியோரும் உண்டியல் எண்ணும் பணியை மேற்பார்வையிட்டனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்