காஞ்சிபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக அரசு குடும்ப அட்டைகளுக்கு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்ய வெளிமாநிலங்களுக்கு கடத்தி செல்லப்படுகிறது. மாவட்டத்தில், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க காவல் துறை, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வு துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், குடிமைப்பொருள் மற்றும் குற்ற புலனாய்வு துறை இயக்குநர் ஆபாஷ்குமார், கண்காணிப்பாளர் கீதா, துணை கண்காணிப்பாளர் நாகராஜன் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தலை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் முகேஷ்ராவ் தலைமையில்  நேற்று, காஞ்சிபுரத்தை அடுத்த ஆட்டுப்புத்தூர் கிராமம் சிவன்கோயில் செல்லும் வழியில் தாங்கல் அருகில் உள்ள கொட்டகையை சோதனை செய்தனர். அங்கு, சுமார் 50 கிலோ எடை கொண்ட 90 மூட்டைகளில் மொத்தம் 4.5 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, ஆட்டுப்புத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (45) என்பவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். மேலும், பதுக்கி வைத்திருந்த  ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். …

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை