காஞ்சிபுரத்தில் கூட்டுறவு துறை சார்பில் மலிவு விலையில் தக்காளி விற்பனை: கலெக்டர் தொடங்கி வைத்தார்

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில், மலிவு விலையில் தக்காளி விற்பனையை கலெக்டர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து, ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையாகி வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்களின் கவலைகளை போக்கும் வகையில், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த, தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.

இதன்படி, கூட்டுறவுத்துறை சார்பில், தக்காளி விவசாயிகளிடமிருந்து, நேரடியாக கொள்முதல் செய்து லாப நோக்கம் இல்லாமல், அனைத்து ரேஷன் கடைகளிலும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ தக்காளியை ரூ.60க்கு விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில், ரேஷன் கடைகளில் மலிவு விலை தக்காளி விற்பனை கடந்த சில நாட்களுக்கு முன்பு துவக்கி வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கூட்டுறவு துறை சார்பில் ரேஷன் கடைகளில் மட்டும் அல்லாது மினி லாரிகள் மூலம் ஆங்காங்கே மலிவு விலை தக்காளி விற்பனை துவக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதியில் கூட்டுறவு துறை மினி லாரியில் வைத்து, மலிவு விலை தக்காளி விற்பனை இரவு நேரத்திலும் ஜோராக நடைபெற்றது. இதில், ஒரு கிலோ ரூ.60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து போட்டி போட்டுக் கொண்டு மலிவு விலையில் தக்காளியை வாங்கிச் சென்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை