காஞ்சிபுரத்தில் காவலர் குறைதீர் முகாம்

 

காஞ்சிபுரம்: தமிழ்நாடு காவல் துறையின் தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு அறிவுறுத்தலின்பேரில், உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலக வளாகத்தில், காவலர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் நேற்று நடந்தது. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகள் மற்றும் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் 20 காவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், மாவட்ட போலீஸ் எஸ்பி காவலர்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த மனுக்களில் பணி மாறுதல், ஊதிய முரண்பாடுகளை களைதல், சிறு தண்டனை ரத்து செய்தல், காவலர் குடியிருப்பு கோருதல், காவலர் சேமநல நிதியிலிருந்து மருத்துவ உதவித்தொகை கோருதல் உள்ளிட்ட துறை ரீதியான மனுக்களின் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி