காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உறுதி அரவக்குறிச்சியில் இளைஞர்களுக்கான உடற்பயிற்சிக் கூடம் அமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

அரவக்குறிச்சி, ஏப். 20: அரவக்குறிச்சியில் இளைஞர்களுக்கான உடற்பயிற்சிக் கூடம் அமைக்க வேண்டுமென்று இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுடைய சிந்தனை பல்வேறு இழிவுப் பாதையை நோக்கிச் செல்கிறது. அவர்களை நல்வழிப்படுத்தும் பல்வேறு வகைகளில் உடற்பயிற்சியும் அவசியமான ஒன்றாகிறது. பெரும்பாலான பேரூராட்சி மற்றும் நகராட்சிகளிலும் ஒரு சிறு குறுகிய இடத்திலேயே புல்லப்சேர், செஸ்ட் இன்கிரீசர் சேர், ரோலர்ஸ், தம்ப்ள்ஸ் போன்றவைகள் அமைக்கப்பட்டு இளைஞர்களை நல்வழிப்படுத்தப்படுகிறது. அரவக்குறிச்சி பேருராட்சி பகுதியில் இத்தகைய உடற்பயிற்சிக் கூடத்தை அமைப்பதன் வாயிலாக இளைஞர்களின் உடல் நலன் உளநலன் பாதுகாக்கப்படும் நிலை ஏற்படும். இளைஞர் உடல் நலனைப் பேணுவதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி சிறப்பாக செயல்படுவதால் இளைஞர்களுக்கான உடற்பயிற்சிக் கூடம் அமைப்பதன் மூலம் இளைஞார்கள் மிகுந்த மகிழ்ச்சி கொள்வதாக இருக்கும். எனவே இளைஞர்கள் நலன் கருதி அரவக்குறிச்சி பேருராட்சி பகுதியில் உடற்பயிற்சிக் கூடம் அமைக்க பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்